tamilnadu

img

ஒரே ஆண்டில் 3வது முறையாக பேஸ்புக் வாட்ஸ்அப் சேவை முடக்கம்

பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள், நேற்று உலகின் பல பகுதிகளில் முடங்கியது. 

பேஸ்புக், தன்னிடம் இருக்கும் பயனர்களின் தகவல்களை சரிவர பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலை பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்கள் நியூயார்க்கில் செயல்பட வில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் காலை 6:30 மணி முதலே பேஸ்புக் நிறுவன பக்கங்கள் முடங்கியதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் இருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து பேஸ்புக் நிறுவனம், ‘எங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் உள் நுழைவதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம்' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு ஜனவரி மாதம், இன்ஸ்டாகிராம் ஆப், இப்படித்தான் முடங்கியது. அப்போது வாட்ஸ்அப் பயனர்களும் எந்த வித செய்திகளைப் பெறவோ அனுப்பவோ முடியவில்லை. கடந்த மாதம் கூட பேஸ்புக், 12 மணி நேரம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.