tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை விஞ்சிய அமெரிக்கா புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு

வாஷிங்டன், மார்ச் 27- 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று களுடன் உலகிலேயே கொரோனா வைர ஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழ கத்தின் சமீபத்திய தரவின்படி (வெள்ளி மதியம்), கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அளவில் அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனா வில் (3169) ஆகியவை அதிக இழப்பு களை சந்தித்துள்ளன. உலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057  என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா “மிகவும் வேகமாக” மீண்டெ ழும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு என்னும் நிலையை அமெரிக்கா பெற்றுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத் தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெ ரிக்கா முழுவதும் முடக்க நிலை அறி விக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரவுள்ள கிறித்துவர்களின் முக்கிய பண்டிகையான உயிர்ப்பு ஞாயி றுக்கு (Easter Sunday) முன்னதாக இந்த முடக்க நிலையை திரும்பப் பெறுவதற்கு டிரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளது அந்த நாட்டில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வரு கிறது. அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதைப் போன்ற உத்வேகத்தை அளிப்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக கருதப் பட்டாலும், வியாழக்கிழமை அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 3.3 லட்சம் மக்கள் இந்த நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக அரசிடம் முறையிட்டுள் ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழு வதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், சேவை மற்றும் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட் டுள்ளது பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதனால் மக்கள் அதிவேகமாக வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்ற னர். அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பெரு மந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக் கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமெரிக்கா வின் 50 மாகாணங்களிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதுவரை 5,52,000 பரி சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.