tamilnadu

img

குதிரையில் திருமண ஊர்வலம் சென்ற தலித் ராணுவ வீரர் மீது தாக்குதல்

அகமதாபாத்:
குதிரையில் திருமண ஊர்வலம் சென்றதற்காக, தலித் வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, ராணுவ வீரர் என்றுகூட பார்க்காமல், கல்லால் அடித்துத் தாக்கிய சம்பவம் பாஜக ஆளும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், பழன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் கோட்டியா. 22 வயதான இவர்,தலித் வகுப்பைச் சேர்ந்தவர். அண்மையில் பெங்களூருவில் ராணுவ வீரருக்கான பயிற்சியை முடித்த இவர், மீரட்டில் பணியில் சேரவுள்ளார்.

முன்னதாக அவரது குடும்பத்தினர் திருமணம் ஏற்பாடு செய்த அடிப்படையில், கடந்த ஞாயிறன்று குதிரையில்மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற் றுள்ளது. அப்போது, தலித் வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் கோட்டியா, குதிரையில் செல்வதா? என்று ஆத்திரமடைந்த கோலி பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்கவெறியர்கள், ஆகாஷ் கோட்டியா மீதும்,ஊர்வலத்தின் மீதும் சரமாரியாக கற்களை வீசியுள்ளனர். மேலும், கோட்டியாவை கீழே தள்ளி அடித்து உதைத்த அவர்கள், “கீழ்சாதியான நீ குதிரையில் ஏறுவதற்கு ஆசைப்படலாமா?” என் றும், “அதற்கு நீ உயர்ந்த சாதியில் பிறந்திருக்க வேண்டும்” என்றும் இழிவாகப் பேசியுள்ளனர்.

இவ்வளவுக்கும் போலீஸ் பாதுகாப்புடன்தான் ஊர்வலம் நடைபெற் றுள்ளது. மேலும், ஆகாஷ் கோட்டியா ஒரு ராணுவ வீரனாக இருந்தும், எனினும் உயர்சாதி வெறியர்கள், கொடூர வெறியுடன் இந்த தாக்குதலை அரங் கேற்றியுள்ளனர்.படுகாயம் அடைந்த ஆகாஷ் கோட்டியா மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலில்ஈடுபட்ட செஞ்சி கோலி, சிவாஜி கோலி,தீபக் கோலி, துஷார் கோலி, பவன் கோலி, வினோத் கோலி, ராமாஜி கோலி,தீபக் ஈஸ்வர் கோலி, பாய் கோலி, மஞ்சுகோலி மற்றும் ஜீது கோலி உட்பட 11பேர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.