அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்க மறுப்பு தமிழக - கேரள ஆளுநர்கள் மீண்டும் அடாவடி
அரசாங்கம் தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல், தமிழக, கேரள ஆளுநர்கள் வழக்கம்போல அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உரையை முழுமையாகவே வாசிக்காமல் ஓட்டம் பிடித்த நிலையில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், ஒன்றிய அரசுக்கு எதிரான வார்த்தைகளை தன்னிச்சையாகவே நீக்கி வாசித்து, அரசியலமைப்புச் சட்டக் கடமையை மீறியுள்ளார். ஆளுநர்களின் இந்த அடாவடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தபடி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (ஜன.20) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ப தால், ஆளுநர் உரையாற்றுவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 9.20 மணிக்கு சட்டப் பேரவைக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் ரவிக்கு மரபுப்படி பூங்கொத்து கொடுத்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு வரவேற்றார். அதைத்தொடர்ந்து, பேரவை வளாகத்திற் குள் வந்த ஆளுநருக்கு சிவப்புக் கம்பள வர வேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர், அமைச்ச ர்கள் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பின ர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆளுநர் ரவியை வரவேற்றனர். தேசிய கீதத்தைக் காட்டி சாக்குப் போக்கு ஆளுநர் தமது இருக்கையை அடைந்த வுடன், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின்னர், மரபுப்படி ஆளுநர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்தவுடன் தேசிய கீதத்தை யும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்தார். அது மரபல்ல என்பதால், ஆளுநர் உரை முடிந்த பிறகு, சட்டப்பேரவை நிறைவடையும்போது வழக்கம்போல தேசிய கீதம் ஒலிக்கப்படும் என பேரவைத் தலைவர் தெரிவித்தார். அப்பாவு எடுத்துச் சொல்லியும் அடம்பிடித்த ஆர்.என். ரவி அத்துடன், உரையைப் படிக்குமாறு ஆளுநரை, இரண்டு மூன்று முறை பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அப்போதும் ஆளுநர் உரையை வாசிக்காமல் இறுக்கமாக நின்றதால், ஆளுநர்னது சொந்த கருத்துக்களை தெரிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் கிடையாது என்றும், அமைச்சரவை தயாரித்து கொடுக் கும் உரையை முழுமையாக வாசிப்பது மட்டுமே அவரது பணி என்பதையும் பேரவைத் தலைவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், உரையை வாசிக்கா மல் பிடிவாதம் பிடித்த ஆளுநர் ரவி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட வில்லை என்ற வழக்கமான கார ணத்தைக் கூறி சட்டப்பேரவை யிலிருந்து வெளியேறினார். ஆளுநரின் அடாவடிக்கு எதிராக தீர்மானம் அதைத்தொடர்ந்து, ஆளுந ரின் இந்த அடாவடிக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீர்மா னம் ஒன்றைக் கொண்டு வந்தார். “தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் மீண்டும் ஒருமுறை, சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறிச் செயல்பட்டு அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றிருக் கிறார்” என்று குறிப்பிட்ட முதல்வர், “ஆளுநரின் செயல் அவர் வகிக்கக் கூடிய பதவிக்கு அழகல்ல!” என்றார். சட்டப்பேரவை மாண்பை அவமதித்த ஆளுநர் “இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழு மையாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்” என்று முதல்வர் எடுத்துரைத்தார். “பேரவையில் ஆற்றும் உரை யில், ஆளுநர் தமது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்ப தற்கோ, மாநில அரசால் தயா ரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசியல மைப்புச் சட்டத்தில் இடமில்லை. பிரிவு 176-இன் படி, தெளிவுரை களைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. ஆளுநர் ஜனவரி 19 அன்று சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு கடிதம் எழுதியதைத் தொ டர்ந்து அவருக்கு அதற்கான பதி லும் அளிக்கப்பட்டது. இந்நிலை யில் ஆளுநர் வேண்டுமென்றே அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார்.
ஆளு நரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம் பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் அவையை, அதன் மாட்சி மையை அவமதிக்கும் செயலா கும்” என்று தெரிவித்தார். அண்ணாவும் கலைஞரும் கடைப்பிடித்த மரியாதை ஏப்ரல் 10, 2023 அன்று இதே பேரவையில் தான் ஆற்றிய உரை யின் ஒரு பகுதியை நினைவுகூரும் விதமாக முதல்வர் பேசினார். ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று அண்ணா கூறினார், அதை கலைஞர் வழிமொழிந்தார் என்று குறிப்பிட்ட முதல்வர், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர் கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை என்று நினைவுபடுத்தினார். அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதி லிருந்து இம்மியளவும் விலகிய தில்லை, இந்த அரசும் தவறிய தில்லை என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன் என்றார். அந்தக் கொள்கையையொட்டியே ஆளு நர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணை யிட்டதாகவும் தெரிவித்தார். எனினும், ஆளுநர் அவர்கள் ஏற்கெனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல் பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற் குரியது என்ற முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம் என்ற நிலையில், ஆளு நர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில்
ஆர்வம் கொண்டவ ராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும் என்றார். மக்க ளுடைய பேராதரவோடு, பெரும் பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக் கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்ப வராக இருக்க வேண்டும் என்ப தையே அரசியலமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது என்பதை யும் சுட்டிக்காட்டினார். மாநில நிர்வாகத்தை முடக்கும் ஆளுநர் தமிழ்நாடு ஆளுநரோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார் என்று முதல்வர் குற்றம் சாட்டி னார். மாநில நிர்வாகத்தை முடக்க வும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பி வரு கிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனி னும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல என்றார். நூற்றாண்டு விழா கொண்டாடி, சீரோடும், சிறப்போடும் இயங்கு கின்ற இப்பேரவையின் புகழ் மங்கி டாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தி னைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவை யின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், தீர்மா னம் கொண்டு வர பேரவைத் தலை வர் அவர்களின் இசைவோடு, சட்ட மன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனு மதி கோருவதாக முதல்வர் தெரி வித்தார். முதல்வர் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம்! அதன்படி ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ் நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல் ஆளுநர் அவர்கள் சென்றுள்ளதை இப்பே ரவை ஏற்கவில்லை என்று தீர்மா னத்தில் முதல்வர் தெரிவித்தார். ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்ட தாக இப்பேரவைக் கருதுகிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு மேலும், மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பி னர்களும் ஒருமனதாக நிறை வேற்றித் தர வேண்டுகிறேன் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். பின்னர், மேற்படி தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தந்த உறுப்பினர் களுக்கு நன்றி தெரிவித்த முதல மைச்சர், இந்தச் சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து, இந்தத் தீர்மா னத்தை நிறைவேற்றித் தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார். அதிமுக - பாஜக வெளிநடப்பு ஆளுநருக்கு எதிராக முதல மைச்சர் தீர்மானம் கொண்டு வந்தி ருந்த நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. அவர்க ளோடு சேர்ந்து பாமக அன்புமணி பிரிவு எம்எல்ஏ-க்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால், ராமதாஸ் பிரிவு பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகிய இருவரும் அவை நடவடிக்கை களில் தொடர்ந்து பங்கெடுத்தனர்.
