tamilnadu

img

‘கேரளத்தில் 3-ஆவது முறையும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி’

‘கேரளத்தில் 3-ஆவது முறையும்  இடது ஜனநாயக முன்னணி ஆட்சி’

காசர்கோடு, பிப். 2 - கேரளத்தில் தொடர்ந்து ‘மூன்றா வது முறையாகவும் இடது ஜன நாயக முன்னணி ஆட்சியே!’ என்ற  முழக்கத்தை முன்வைத்து, மாநிலம் முழுவதும் மாபெரும் பிரச்சாரப் பயணம் துவங்கியுள்ளது. இதில், கேரளத்தின் வளர்ச்சி யை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை வழங்கக் கோரி, வடக்கு மண்டல  அளவில் காசர்கோடு மாவட்டம் மஞ்சுவரத்தில் புறப்பட்ட பிரச்சா ரப் பேரணியை முதலமைச்சர் பின ராயி விஜயன் துவக்கி வைத்தார்.யாக தனது அந்த செயல்பாடுகள் ‘பலன் அளித்தது!’ (IT WORKED!) என்று மின்னஞ்சலை முடித்துள்ளார். இதற்கு இந்திய ஒன்றிய வெளி யுறவு அமைச்சகம் பதிலளித்தது. அதில்,  “2017-இல் பிரதமர் மோடி  மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தைத்  தவிர, அந்த மின்னஞ்சலில் உள்ள  மற்ற குறிப்புகள் அனைத்தும் ‘தண் டனை பெற்ற ஒரு குற்றவாளியின் குப்பையான சிந்தனைகள்’ என்றும்,  அவற்றை, ‘முற்றிலும் அலட்சியப் படுத்த வேண்டும்’ என்று மட்டும் கூறி  நழுவியிருந்தது.  இதற்கு முன்பு, ஒன்றிய அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிப்ப தாக ‘தி வயர்’ ஊடகம் செய்தி வெளி யிட்டிருந்தது. அதனை உண்மை தான்  ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசுத் தரப்பு,  ஹர்தீப் சிங் பூரி, அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு எப்ஸ்டீனு டன் கொண்டிருந்த தொழில்முறை தொ டர்புகள் மட்டுமே என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.  எனவே, மோடி - எப்ஸ்டீன் விவகா ரத்தை சர்வதேச ஊடகங்கள் முக்கியப்  பிரச்சனையாகப் பார்க்கின்றன.  எனவே, சர்ச்சைக்குரிய ‘எப்ஸ்டீன்  கோப்புகள்’ (Epstein files) குறித்த  குற்றச்சாட்டுகள் குறித்து, ஒன்றிய  அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர் மாணிக்கம் தாகூர் திங்கட்கிழமை  (பிப்.2) மக்களவையில் ஒத்திவைப்பு  தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கினார். ஜெப்ரி எப்ஸ்டீன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரதமர் மோடியுடனோ அல்லது இந்திய அரசு டனோ எப்போதாவது தொடர்பு கொண்டிருந்தாரா? 2017 ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதி பதி உடனான சந்திப்பு அல்லது ஜூலை 2017-இல் இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாக, எப்ஸ்டீனுடன் தொடர்பு டைய நபர்களிடமிருந்து ஏதேனும்  ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் கள் பிரதமர் மோடி தரப்பில் பெறப்பட் டதா? என்ற கேள்விகளுக்குப் பதில் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

‘கேரளம் மீண்டும் வரலாறு படைக்கும்!’

பிரச்சாரப் பேரணியைத் துவக்கி வைத்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: “கேரளத்தில் அனைத்து மதத்தினருக்கும், மதச்சார்பற்ற மக்களுக்கும், இந்த மண்ணில் வாழும் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான திட்டங்களை எந்தவித பாகுபாடுமின்றி இடது ஜனநயாக முன்னணி அரசு நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில், கேரளத்தில் எந்த வகுப்புவாத மோதல்களும் இல்லை. இதனை சங்-பரிவார சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட தேசியக் கட்சியும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. மத உணர்வுகளை தூண்டி விடுகிறது. கேரளத்தில் போட்டி ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக இடையே தான் என்று பாஜக தலைவர் கூறுகிறார். ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் ஒருவரும் அதையே சொல்லி உற்சாகம் அடைகிறார். உண்மையில், மூன்றாவது முறையாகவும் இடது ஜனநாயக முன்னணியையே கேரள மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இடது ஜனநாயக முன்னணி வரலாறு படைப்பது உறுதி!”  இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.