வேலூர் பாலாற்றில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று புதன் அன்று அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடந்த பின்னரும் வேலூரில் இன்று (வியாழன்) காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.