விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சுமார் 50 ஏக்கர் பரப்பிளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்துமழை பெய்து வருவதால்இப்பகுதியிலுள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செவ் வாய்க்கிழமை விடிய விடிய பெய்த மழையால் கான்சாபுரம் பகுதியில் முத்தையா,ராசு, சாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்குச்சொந்தமான சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 60 நாட்களே ஆன நெற்பயிர் கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வயல்களில் தேங்கும் மழைநீர் செல்வதற்குபோதுமான வடிகால் வசதி இல்லாததால் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்ட விவ\சாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மம்சாபுரம்
திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியில் பெய்த தொடர்மழையால் வாழைக் குளம் கண்மாய் நிறைந்ததால் மடை திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு அதிகமாக தண்ணீர் வெளியேறியதால் ஆற்று பாசனத்தை நம்பியுள்ள நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
தரைப்பாலம் மூழ்கியது
திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதனன்று இரவு முதல் விடியவிடிய பெய்தது. இதன் காரணமாக கூமாப்பட்டி - பிளவக்கல் அணை செல்லும்சாலையில் உள்ள பட்டுப்பூச்சி நகர், மற்றும்ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள இரண்டுதரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் போங்ககுவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் பாலத்தை கடைக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது.
வீடுகள் இடிந்தன
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியில் முருகன் என்பவரது வீடு, நகமங்கலம் பகுதியில் கிருஷ்ணன்என்பவருக்கு சொந்தமான வீடு, பிள்ளையார் குளம் பகுதியில் கல்யாணி என்பவருக்கு சொந்தமான வீடு ஆகியவை இடிந்து
விழுந்தன.
நாற்றுநடும் போராட்டம்
இதற்கிடையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிழ்த்தானிலிருந்து நாகபாளையம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நரியன்குளத்தில் நாற்று நடும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில ஈடுபட்டவர்கள் கூறுகையில், “ஏற்கனவே இந்த சாலை குண்டும்-குழியுமாகத்தானிருந்தது. தற்போது மழை பெய்துவருவதால் சாலை பயன்படுத்த லாயக்கற்றதாகிவிட்டது. கோரிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாற்று நட்டு போராட்டம் நடத்தினோம் என்றனர்.பிள்ளையார் குளம் ராமகிருஷ்ணாபுரம் புதூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நடைபெற்ற நாற்றுநடும் போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மழையிலும் அயராத மாற்று திறனாளிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் தமிழகஅரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ், பாலகிருஷ்ணன், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.