tamilnadu

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில், திருநெல்வேலி முக்கிய செய்திகள்

சாலை  மறியல் செய்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற திமுக

இராஜபாளையம், ஜன.2- இராஜபாளையம் உறுப்பினராக 12- வதுவார்டு ஒன்றி யக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு திமுக சார்பில் போட்டி யிட்ட பூமாரி வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்க தேர்தல் அலுவலர் மறுத்திருக்கிறார். இதற்குக் காரணம் அதிமுகவினரின் மிரட்டல் தான் எனக்கூறி தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார், இராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் ஆகியோர் தொண்டர்களுடன் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை ரவுண்டானா பகுதி யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் கவ னத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அவர் நேரடியாக வந்து விசாரணை நடத்தி திமுக வேட்பாளர் பூமாரிக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

79 வயது மூதாட்டி வெற்றி

மதுரை, ஜன.2-மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற் போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் 193 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அவர் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வேடசந்தூரில் வாக்கு எண்ணிக்கை 
இரண்டு மணி நேரம் நிறுத்தம்

வேடசந்தூர், ஜன.3- வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி வாக்குக்கள் எட்டு கட்டமாக எண்ண முடிவு செய்யப்பட்டது. இதில் கல்வார்பட்டி பாலப்பட்டி, கூவக்கா பட்டி, குளத்துப்பட்டி, குடப்பம், உசிலம்பட்டி, வெல்லம் பட்டி ஆகிய ஊராட்சி வாக்குகள் மூன்று கட்டமாக எண்ணப்பட்டது. மதியம் 2.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடு படும் பணியாளர்கள் உணவிற்காக இடைவெளி விடப் பட்டது. உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டதால் 3.45 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இதையடுத்து திமுக-வினர் தேர்தல் நடத்தும் அலு வலர்கள் அஹமது, அந்தோணியார், காவல் துணை கண்காணிப்பாளர் இளவரசன் ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதால் வேண்டு மென்றே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனையடுத்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மாலை நான்கு மணிக்கு தொடங்கியது.

திருவில்லிபுத்தூரில் “0” வாக்கு பெற்ற வேட்பாளர்

திருவில்லிபுத்தூர் ஜன.2- திருவில்லிபுத்தூர் ஒன்றியக் கவுன்சில் நான்காவது வார்டில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர் இதில் திமுக வேட்பாளர் ஆறுமுகம் 1,658 வாக்குகள் பெற்றார், 583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பா ளர் முத்துக்குமார் 1,075 வாக்குகள் பெற்றார். இந்த வார்டில் போட்டியிட்ட ஜெயா என்ற சுயேட்சை வேட்பாளருக்கு யாரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கஞ்சா, மது விற்ற 3 பேர் கைது

நாகர்கோவில், ஜன.2- குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்ற வர்களை கண்காணித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  கொல்லங்கோடு காவல்துறையினர் மணலி பகுதி யில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது அங்கு சந்தே கப்படும் படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதை யடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், கேரள மாநி லம் தெங்கிலாவு பகுதியை சேர்ந்த சஜின் ஜெயக்குமார் (22) என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட சோத னையில் அவர் மறைத்து வைத்திருந்த பையில் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் இரணியல் ரெயில்வே பாலம் அருகில் வாலிபர் ஒருவர் அனுமதி இன்றி மது விற்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தலக்குளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என் பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த னர். நெட்டாங்கோடு பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக செல்வகுமார் (42) என்பவரை கைது செய்து அவரி டம் இருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் ஆய்வு

 திருநெல்வேலி, ஜன.2- நெல்லை மாவட்டத்தில் 51 நியாய விலைக் கடை களில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்க ளின் இணைப் பதிவாளர் த.நா.பிரியதா்ஷினி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உத்தரவின்பேரில், நெல்லை மாவட்ட துணைப் பதிவாளர் சங்கலிராஜ் தலைமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 51 நியாய விலைக் கடைகளில் கூட்டு றவுத் துறை அலுவலர்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 17 கிலோ அரிசி, 63.5 கிலோ சா்க்கரை, 29 கிலோ துவரம் பருப்பு, 5 பாக்கெட் பாமாயில், 29 தேயிலை பாக்கெட், 83 உப்பு பாக்கெட் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு குறைவாக இருந்தது.  இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, தவறு செய்த பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் விநியோகத்தில் தவறு செய்யும் நியாய விலைக் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;