tamilnadu

img

தேர்ச்சி குறைந்த 20 பள்ளிக்கு சிற்றுண்டி

விழுப்புரம்.டிச.29- விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 2020 மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவ தற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது உரை யாற்றிய ஆட்சியர்,“ ஆசிரி யர்கள் பாடங்களை மாண வர்களுக்கு போதிப்பதில் புதிய அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளை ஆசிரியர்கள் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் கற்றுக் கொடுக்கும் கோணங்களை மாற்றுவதோடு செயல் முறை வடிவத்தோடு மாண வர்களுக்கு கற்பித்தால் யாரும் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள்” என்றார். வகுப்புக்கு பாடம் நடத்தச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அந்த பாடத்தை முழுமையாக தெரிந்துகொண்டு மாண வர்களுக்கு எளிதில் புரியும்படி நடத்த வேண்டும். நீங்கள் பாட புத்தகங்களை படிக்கும்போது உங்க ளுக்கும் புதுப்புது சிந்தனை கள் வரும். பின்தங்கிய மாண வர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நன்றாக படிக்காத மாண வர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களை தேர்ச்சி பெற வையுங்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதோடு மட்டுமின்றி சாலை விதிகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். ஆசிரியர்களும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணப்பிரியா, நட ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற 20 அரசுப் பள்ளிகளில் காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார். இந்த சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கிட ஒரு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, தனது விருப்ப நிதியில் இருந்து வழங்கினார். அப்போது வருகிற மார்ச் மாதம் நடை பெற உள்ள அரசு பொதுத் தேர்வில் இந்த பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். 

;