tamilnadu

img

மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது

மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 6- பெண்ணையாற்றின் குறுக்கே நீர்த்தேக் கம் அமைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஆளுநர் உரையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜன.6) ஆளுநர் ஆற்றிய உரையில், கர்நாடக அரசால் மேக்கே தாட்டூ திட்டத்திற்காக தயா ரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை நிராக ரித்து உடனே திருப்பியனுப்பவும், உச்சநீதி மன்ற ஆணையின்படி, தமிழ்நாடு அரசின் முன்  அனுமதியின்றி கர்நாடகாவிலுள்ள காவேரி வடிநிலப் பகுதியில் எந்த கட்டுமான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படாமல் தடுத்து நிறுத்து வதை உறுதி செய்யவும், மத்திய அரசை  மீண்டும் ஒருமுறை இந்த அரசு வலியுறுத்துகி றது. பெண்ணையாற்றுப் படுகையில் உள்ள  மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம்  அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2012ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்போதைய  பாரதப் பிரதமருக்கு  கடிதம் எழுதி, கர்நாடகா வில், பெண்ணையாற்றில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கோ அல்லது நீரோட்டப் பாதையை  மாற்றி அமைப்பதற்கோ தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தார். மேலும் 2018ஆம் ஆண்டு மே மாதத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தர வின் அடிப்படையில், 1956ஆம் ஆண்டு மாநி லங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகள் சட்டத்தின் கீழ், பெண்ணையாறு விவகாரம் குறித்து தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பான அசல் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது. இதற்கான  தீர்ப்பாயத்தை விரைவில் அமைக்குமாறும், தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி பெண்ணை யாற்றின் வடிநிலப் பகுதிகளில் நீர்த்தேக்கப் பணிகள் அல்லது நீரோட்டப் பாதையை மாற்றி யமைக்கும் எந்த ஒரு கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படியும், மத்திய அரசிடம் இந்த  அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

முதல்வர்கள் பேச்சுக்கு வரவேற்பு 

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மற்றும்  அது தொடர்பான பிரச்சனைகளில், தமிழக  முதலமைச்சரின் இணக்கமான அணுகுமுறை யையும், திருவனந்தபுரம் சென்று, கேரள முதல மைச்சருடன் நன்மை பயக்கும் பேச்சுவார்த்தை  மேற்கொண்ட அவரது முயற்சியை பாராட்டுகி றேன். இதன் தொடர்ச்சியாக, அதிகாரிகள் அள விலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கான பணி களை மேற்கொண்டு, அதன் நீர்த்தேக்க அள வினை மீண்டும் 152 அடிக்கு உயர்த்த, தமிழ்  நாட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள் ளது.  இதன்படி, அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு 7.85 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. எனவே, முல்லைப்  பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகளை கேரள அரசும், மத்திய அரசும் விரைவாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.