tamilnadu

img

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜன.17- வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை  21 டிகிரி செல்சிய சாக பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

;