tamilnadu

img

வரும் டிசம்பர் 16 முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வரும் டிசம்பர் 16 முதல், நெஃப்ட் மூலம்  24மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு, ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை வங்கிகள் வழங்கி வருகிறது. ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகிய மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்யமுடியும். ஆனால் வங்கி நேரங்களுக்கு மட்டுமே, இந்த சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், நெஃப்ட் சேவையில் தற்போது இந்த நடைமுறை வரும் டிசம்பர் 16 முதல் மாறுகிறது. விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.