tamilnadu

img

அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு 

கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளை முதல் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  டெல்லி, கேரளா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் தினசரி தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று இரவில் இருந்து இரவு நேர (இரவு 9 to காலை 6) ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளை முதல் மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதில்,  மாநிலம் முழுக்க 144 தடை அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை தவிர பிற கடைகள், நிறுவனங்கள் திறந்து இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 2,34,907 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,168 பேர் அங்கு சிகிச்சை நோயாளிகளாக உள்ளனர். 2,12,623 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 2,116 பேர் இதுவரை கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
 

;