பாட்னா, ஜூன் 16- மர்ம காய்ச்சல் காரணமாக பீகாரில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 77-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் மர்ம காய்ச்சல் காரணமாக 10 வயதுக்கும் குறை வான குழந்தைகள் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கேஜரிவால் மருத்துவமனையில் தற்போது இந்த மர்ம காய்ச்சல் காரண மாக 172 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மர்ம காய்ச்சல் காரண மாக கடந்த 3 வாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 66 மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனை யில் 11 என உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 77-ஆக சனிக்கிழமை அதி கரித்துள்ளது. உள்ளூரில் இதனை சம்கி காய்ச்சல் என அழைக்கின்றனர். மருத்துவர்கள் இதனை அக்யூட் என்சிபாலிடிஸ் சிண்ட் ரோம் (ஏஈஎஸ்) என்று தெரிவித்துள்ள னர். குழந்தைகளுக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடலின் சத்துக்குறை பாடு காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இருந்தா லும் நோய் பாதிப்பின் உண்மைத்தன்மை இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த குழந்தை களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள் ளார். மேலும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு இதற்கு தக்க தீர்வு காண உரிய நட வடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.