செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

வெப்பச்சலனம் எதிரொலி.... மதுரையில் மிதமான மழை 

மதுரை 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றால் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு நேற்று அறிவித்திருந்தது. 

இதன்படி குறிப்பாக மேற்கு தொடர்ச்சி பகுதியின் தேனி, தென்காசி, கோவை ஆகிய பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்த நிலையில், தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய நகரான மதுரையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று  மாலைநேரப் பொழுதில் பலத்த காற்றுடன் மிதமான அளவில் பெய்தது. இதனால் மதுரை வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. 

;