மத்திய பிரதேசத்தில் பெண்களை பொது வெளியில் துன்புறுத்தியவர்களுக்கு சாலையிலேயே காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வரலாகி வருகிறது.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மத்திய பிரதேச காவல்துறையினர் சனிக்கிழமை இருவரையும் பரபரப்பான சாலையின் நடுவில்தோப்புக்கரணம் செய்ய வைத்ததாக வீடியோ பரவி வருகிறது. பகிர்ந்த வீடியோவில், இருவருமே காதுகளைப் பிடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதை செய்வதைக் காண முடிந்தது. காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்களை தடியடி நடத்தியதையும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
வருடாந்திர தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2019 அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018 முதல் 2019 வரை 7.3 சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும் பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களும், இதே காலகட்டத்தில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளன. மாநிலங்களில், மத்திய பிரதேசம் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 27,560 வழக்குகள் பதிவாகியுள்ளன.