tamilnadu

img

கஞ்சா விற்பனையை தடுக்க  வாலிபர் சங்கம் கோரிக்கை

கஞ்சா விற்பனையை தடுக்க  வாலிபர் சங்கம் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, செப்.17- உளுந்தூர்ப்பேட்டை நகரம் மற்றும் ஒலையனூர், களமருதூர், செங்குறிச்சி, செம்மணங்கூர், கணையார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கஞ்சா புகைப்பழக்கம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், தினந்தோறும் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் பெற்றோர்கள், மாணவர்கள், சமூகத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே, கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உளுந்தூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ.சதிஷ்குமார், செயலாளர் மு.சிவகுமார்,  துணைச் செயலாளர் கே.சக்கரவர்த்தி, பி.சின்னராசு, நகர பொருளாளர் கார்த்தி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின் ஆகியோர் உடனிருந்தனர். விழுப்புரம் நகராட்சியில் மோசமான சாலை: சீரமைக்காத அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி  விழுப்புரம், செப். 17- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட கீழ் பெரும்பாக்கம் முதல் காகுப்பம் வரையிலான பகுதியில் சாலைகள் படு மோசம் என்று அப்பகுதி மக்கள் நாண்கு ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்தும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர்நகர் முதல் ஷர்மிளா நகர் வழியாக செல்லும் காகுப்பம் பாட்டை சாலை கடந்த 4 வருடங்களாக சீர மைக்கப்படாததால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி வரு கிறார்கள். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், சட்டமன்ற உறுப்பினர் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. சிதிலமடைந்து கிடக்கும் இந்த சாலையில் நிறைய விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் பயணிப்பதால் பல மருத்துவ பாதிப்புகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.  இனியாவது இந்த சாலையை சீரமைத்து மக்கள் சிரமத்தை போக்கிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை எழுப்பி உள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அலட்சியப்படுத்தும் சம்பந்தப்பட்ட துறை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துள்ளனர்.