உறுதியாய் எதிர்த்து குரல் கொடுப்பீர்!
பள்ளி செல்லும் பாலர்களே பாங்காய் நீங்கள் கற்றிடுவீர் வீணாய் பொழுதை போக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்திடுவீர்! வீட்டுப் பாடம் அனைத்தையுமே விரைவாய் நீங்கள் முடித்திடுவீர் நல்ல நண்பர்கள் சேர்ந்ததுமே நாட்டு விசயம் பேசிடுவீர்! அம்மா அப்பா இருவருக்கும் அன்பாய் உதவிகள் செய்திடுவீர் ஆடு மாடுகள் வீட்டில் இருந்தால் அன்பாய் அவற்றை காத்திடுவீர்! உண்மை நேர்மை வாழ்க்கையில் உயர்வாய் நீங்கள் கடைப்பிடிப்பீர் உண்மையில் அவற்றிற்கு பங்கமெனில் உறுதியாய் எதிர்த்து குரல் கொடுப்பீர்! நாட்டு மக்கள் நலனிலே நல்லோருடன் இணைந்து செயல்படுவீர் இயற்கையை பேணி அனைவருமே இன்பமாய் வாழப் பழகிடுவீர்!