tamilnadu

img

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமானார்

மதுரை, அக்.23- முற்போக்கு எழுத்தாளர் பா.செயப்பிர காசம் ஞாயிறன்று மாலை விளாத்தி குளத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் மதியம் 12 மணியளவில் நடைபெறும். பின்னர் அவருடைய உடல் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமான படைப்புகளை தந்துள்ளார். சிறுகதைத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சூரிய தீபன் என்ற புனை பெயரிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். மன ஓசை ஏட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவப் போராளியாக பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத் துள்ள இரங்கல் செய்தியில், கரிசல் இலக்கியத்தின் முக்கிய  ஆளுமைகளில் பா. செயப்பிரகாசம் ஒருவர். எளிய மக்களின் வாழ்வியல் போராட்டத்தையே அவர் படைப்புகளாக்கினார். எழுத்தாளராக மட்டுமின்றி, களப் போராளியாக வாழ்ந்தவர் பா.செயப்பிரகாசம் என குறிப்பிட்டுள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமுஎகச ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.