tamilnadu

img

திருச்சிற்றம்பலத்தில் உலக தென்னை தின விழா

திருச்சிற்றம்பலத்தில் உலக தென்னை தின விழா

தஞ்சாவூர், செப். 2- உலக தென்னை தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே  உள்ள, திருச்சிற்றம்பலத்தில் செவ்வா யன்று தென்னை தின விழா நடைபெற்றது. பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம், பொன்னி உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் மற்றும் பாராசூட் கற்பக விருக்சா ஆகியவற்றின் சார்பில், திருச்சிற்றம் பலம் - அறந்தாங்கி சாலையில் விழா கொண் டாடப்பட்டது.  கருத்தரங்கில் தென்னை  வளர்ப்பு, உர மேலாண்மை, நீர் மேலாண்மை,  பூச்சி நிர்வாகம், உற்பத்தி பெருக்கம்  பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கோயம் புத்தூர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சாவூர் நெப்போலியன், மன்னார்குடி பிரகாஷ், பேராவூரணி பழனிவேல், முன்னாள்  ஊராட்சி மன்றத் தலைவர் ஞானபிரகாசம் மற்றும் நெய்தல் துரை செல்வம் ஆகியோர் தென்னை சார்ந்த உயர் தொழில்நுட்ப  கருத்துகளை தெரிவித்தனர்.     விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. தென்னை சாகுபடியா ளர்கள், முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.