tamilnadu

img

எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத்தும் பணி துவக்கம்

எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத்தும் பணி துவக்கம்

நாமக்கல், செப்.3- மோகனூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத் தும் பணியினை அமைச்சர்கள் ரா.ராஜேந் திரன், மா.மதிவேந்தன் ஆகியோர் புத னன்று தொடங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வடிப் பாலையில், எத்தனால் உற்பத்தி  அலகு மேம்படுத்தும் பணியினை, சுற் றுலா மற்றும் சர்க்கரை, கரும்புத்தீர் வைத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்தி ரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்  மா.மதிவேந்தன் ஆகியோர் புதனன்று  தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சி யர் துர்காமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், 5 அங்கத்தின ருக்கு ரூ.1,75,000 மதிப்பீட்டில் மாதிரி வயல் மானியத் தொகை மற்றும் தேசிய  வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மானி யத் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ் வில், அமைச்சர் ராஜேந்திரன் பேசுகை யில், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவுத் துறையில் இயங்கக்கூடிய முதல் எத் தனால் ஆலை என்ற பெருமையை பெற்று, இந்த எத்தனால் ஆலை ரூ.1400  லட்சத்தில் வடிவமைக்கப்பட்டு 1993-இல் உற்பத்தியைத் துவங்கியது. தற் போது எத்தனால் உற்பத்தி அலகு மேம் படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் ஆலையின் உற் பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம்  லிட்டரிலிருந்து 50 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கப்படவுள்ளது, என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 2024 – 25 ஆம் ஆண்டு 74,270 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டு, சுமார் 1004 விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி ரூபாய் கரும்பு கிரையத் தொகை பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் அர சின் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு  ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு  ரூ.349- வீதம் ரூ.2.58 கோடி விவசாயி களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழு வதும் கடந்த 4 ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.1145.12 கோடி, வழி வகை கடன் ரூ.800.03 கோடி என ரூ.1945.15 கோடி வழங்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப் பினர் பெ.ராமலிங்கம், மேயர் து. கலாநிதி, சர்க்கரைத்துறை இயக்குநர் த.அன்பழகன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.