சென்னை, அக்.17 - வீடற்றவர்களுக்கு வீடு மற்றும் குடிமனைப் பட்டா கேட்டு திங்களன்று (அக்.17) தமிழகம் முழுவதும் வட்டாட் சியர் அலுவலகங்கள் முன்பு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நிலங்களில் குடியிருப் போருக்கு பட்டா வழங்க வேண்டும்; வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத் தை நகர்ப்புறங்களிலும் அமல்படுத்த வேண்டும்; முதியோர், விதவை, தனிப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, உலக வறுமை ஒழிப்பு தினமான அக்டோபர் 17 திங்களன்று வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவ கங்கை, இராமநாதபுரம், புதுக் கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங் களிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா கலந்து கொண்டு வட்டாட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, ‘‘நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் குடியிருக்க இடமின்றி பெண்கள் தவிக்கின்ற நிலை உள்ளது. எனவே, வீடற்ற அனை வருக்கும் வீடு வழங்க வேண்டும். புறம்போக்கு, கோவில் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’’ என்றார். 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 31 மையங்களில் நடைபெற்றுள்ள மனு கொடுக்கும் இயக்கத்தில், 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்; 10 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி மத்திய சென்னை மாவட்டத்திலும், மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாநில துணைத் தலைவர் பி.சுகந்தி வடசென்னை மாவட்டத்திலும் நடை பெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்.