நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல்ஹாசன் நியமனம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் நாடாளு மன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்பு இருந்த ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் கடந்த ஜூலை 24 அன்று நிறை வடைந்தது. இதில் திமுக சார்பில் நான்கு எம்.பி. இடங்களும், அதிமுக சார்பில் இரண்டு எம்.பி. இடங்களும் இருந்தன. இதில் திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வாகினர். இந்நிலை யில் தற்போது கமல்ஹாசன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு வின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைகோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சளி- இருமல் பிரச்சனைக்காக சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற னர். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பு வார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட தடை
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தமிழ்நாடு காவல்துறை சிறப்பு விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை பொது முகநூல் பக்கங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான எந்தவொரு பதிவையும் காவல் துறையின் குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொடர்பு எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிவுரையை மீறி, முகநூலில் பதிவு களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகம்
சென்னை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி களின் வீடுகளுக்கேச் சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதி வாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேசன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவ றாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்படுமா?
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரச்சா ரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொ டர்ந்து, அரசியல் கட்சி களின் சாலை வல நிகழ்ச்சி களுக்கும் உரிய வழி காட்டு நெறிமுறைகள் வகுக் கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக கட்சி யின் மீது கடும் அதிருப்தியும் கண்டன மும் தெரிவித்தது. இதனிடையே நாமக் கல்லில் இருந்து கரூருக்கு விஜய் செல்லும்போது, அவர் பயணித்த பிரச்சார வாகனம் மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள் ளானது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். விபத்தை ஏற்படுத்திய பிரச்சார வாகனத்தின் மீது வழக்குப் பதிந்து, அதனை பறிமுதல் செய்ய வேண்டாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தக வல் வெளியாகியுள்ளது.