tamilnadu

img

திப்பு எக்ஸ்பிரஸை, உடையார் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றிய மோடி அரசு!

பெங்களூர், அக்.8- புகழ்பெற்ற மன்னர் திப்பு சுல்தான் பெயரில் ஒடிக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை, ஒன்றிய பாஜக அரசு  ‘உடையார் எக்ஸ்பிரஸ்’ என மாற்றியுள்ளது. 1782-இல் மைசூரு மன்னராக பொறுப்  பேற்றவர் திப்பு சுல்தான். பிரிட்டிஷா ருக்கு எதிராக வீரம் செறிந்த விடுதலைப்  போராட்டத்தை நடத்திய அவர், 1799-இல் மரணமடைந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் விவ சாயத்தில் புதிய திட்டங்களை புகுத்தி னார். பொது விநியோக திட்டத்தை செயல்  படுத்தியோடு, சாதி, மத நல்லிணக் கத்தையும் பேணிக்காத்தார். யுத்தப் பயிற்சியில் கைதேர்ந்து திகழ்ந்த திப்பு சுல்தான், ராணுவ தொழில்நுட்பத்திலும் வல்லுநராக இருந்தார். ஆங்கிலே யருக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடிய திப்பு சுல்தான், ‘மைசூர் புலி’ என்ற அடைமொழியால் அழைக்கப்படு கிறார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், பெங்களூரு - மைசூரு இடை யிலான எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திப்பு  எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.  1980 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்த ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, மைசூரு பாஜக எம்.பி.  பிரதாப் சிம்ஹா, எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ள திப்புவின் பெயரை நீக்க  வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடி தம் எழுதினார். ஏற்கெனவே கர்நாடக பாடப்புத்த கத்திலிருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடம்  நீக்கப்பட்ட நிலையில், எக்ஸ்பிரஸ் ரயி லின் பெயரும் நீக்கப்படும் என்று ஏற்கெ னவே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது திப்புவின் பெயர் நீக்கப்பட்டு, உடையார் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்  றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கர்  நாடக மாநில எதிர்க்கட்சிகள் பலவும்  கண்டனம் தெரிவித்துள்ளன. திப்புவின்  பெயரை வரலாற்றிலிருந்து அழிக்கும் முயற்சி என்று அவை குற்றம் சாட்டியுள்ளன. திப்புவின் பெயர் நீக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். “அடுத்து என்ன? இந்துத்துவா கதை களுக்கு ஏற்ப ஹீரோக்களை வில்லன்  களாக வரலாற்றை மாற்றி எழுதுங்கள். இந்துத்துவா கொள்கையை முன்னி றுத்தியவர்களை தூய்மைப்படுத்தி பிரச்சாரப் படங்களை உருவாக்குங்கள். எப்போது நாக்பூரில் இருந்து கோட்சே ரயில் இயக்க போகிறீர்கள்?’’ என்று கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார். இதனிடையே, மைசூருவை ஆண்ட உடையார் மன்னர் ரயில்வே துறை கட்ட மைப்பிற்கு வழங்கிய உதவியை கவு ரவிக்கும் விதமாகவே இந்த பெயர் மாற்  றம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அர சின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதில் அர சியல் இல்லை எனவும் அவர் கூறி யுள்ளார்.

;