கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் நலத்திட்டங்கள்'
கரூர், ஆக. 5- கரூர் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வர், கரூர் மாவட்டத் திற்கு இந்த நான்கு ஆண்டுகளில் ஏறத் தாழ ரூ.3 ஆயிரம் கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை, நலத்திட்டங் களை தந்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். கடவூரில் 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட், கரூரில் மினி ஐடி பூங்கா, அரவக்குறிச்சியில் முருங்கை பூங்கா என பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். மேலும் கரூர் பேருந்து நிலையம் ரூ.40 கோடியில் திறக்கப்பட்டு உள்ளது. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜிம் அமைக்க ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி கள் நடைபெற்று வருகின்றன. கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.7 கோடியில் நீச்சல் குளம் அமைத்திட அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் சுமார் 15 ஆண்டுகளாக மக்களுக்கு கிடைக்காத பட்டாக்கள் 13 ஆயிரம் பயனாளி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் மட்டும் 31 ஆயி ரம் பேர் பயன் பெறுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் விதிமுறைகள் தளர்த்தப் பட்டு, புதிதாகவும் சேர்க்கப்பட்டு வரு கிறார்கள். கரூர் மாவட்டத்தில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடியை உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து தொழில் முனைவோர்கள் முன்னெடுத் திருக்கின்றனர். அந்த வெற்றி பயணத் தில் தமிழக அரசின் பங்கும் இருக்கிறது. கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு சுமார் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை பெற்று தந்த முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி ஆகியோருக்கு கரூர் மாவட்ட மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.