tamilnadu

img

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், செப். 25-  கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி வார்டு எண் 39-க்குட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் 17 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், கூட்டுறவுத் துறையின் சார்பில் ஒரு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வி.செந்தில்பாலாஜி வழங்கினார். மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் ஆர்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.