சென்னை, அக்.9- தமிழ்நாடு சட்டப் பேரவையில் திங்களன்று (அக்.9) நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜூ, “முந்தைய ஆட்சியில் ரூ. 1,296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட் டது. ஆமை வேகத்தில் நடைபெறும் இந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தற்போது சாக்கடை நீர் கலந்து வருகிறது. 24 மணிநேரமும் சுத்த குடிநீர் கிடைக்கும் திட்டம் விரைவில் முடிக்கப்படுமா? என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கம்பத்திலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை அதிமுக ஆட்சியில் ஆரம்பித்தா லும், கிணறு தோண்டும் அனு மதி பெறவில்லை. இத னால் காலதாமதமானது. இன்னும் 15 கி.மீ தான் மீதமுள்ளது. மதுரைக்கு இன்னும் 15 நாட்களில் 160 எம்எல் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். எனவே,மதுரைக்கு விரைவில் சுத்தமான குடிநீர் வழங்குவோம்.” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “செல்லூர் ராஜூ கேட்கும் தண்ணீர் நிச்சயம் வழங்கப்படும். அணை யில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள் ளோம்” என்று நகைச்சுவையாக பதில ளித்தார்.