பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
சிவகாசி, செப்.18- விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ளது கண்ணகி காலனி. எம்.ஜி.ஆர். காலனி. இங்கு ஏராள மான ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளது. ஆனால், பலருக்கு பட்டா வழங்கப்பட வில்லை. எனவே, உடனடியாக பட்டா வழங்க வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாநகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் பேசி னார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என். தேவா கண்டன உரையாற்றினார். தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.