tamilnadu

img

கால்நடை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

சென்னை, அக்.10- உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை வேப்பேரி யிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி  மாணவர்களுக்கு உதவித் தொகை ரூ.7,500 வழங்கப்படுகிறது. தங்களுக் கும் மருத்துவர்களுக்கு இணையாக உதவித் தொகை ரூ.23,500 வழங்க வேண்டும். ராஜஸ்தானில் உதவித் தொகை ரூ.21,760, கர்நாடகாவில் ரூ.17 ஆயிரம், உத்தரப்பிரதேசத்தில் ரூ.23,500 கேரளாவில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதே போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  “நாங்கள் இறுதி ஆண்டு மாணவர்கள், எங்களுக்கு படிப்பு முடிந்து விட்டது. ஒரு வருடம் கால்நடை மருத் துவ பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு  முழுவதும் நடக்கிறது. பயிற்சி அளிப் பதற்கான உதவித் தொகை பெறு வதற்கு பதிவு செய்யப்படுகிறது. பயிற்சிக்கான உதவித் தொகை ரூ.7,500 என்று பதிவு செய்ய சொல்லு கிறார்கள். எனவே அதனை புறக்கணித் துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாட்டோம்” என்றனர்.

;