tamilnadu

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்காவை எதிர்கொள்ள தயார்: வெனிசுலா ஜனாதிபதி அறிவிப்பு

வெனிசுலா எல்லையில் ராணுவக்கப்பல் களை நிறுத்தி அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. இது போர்ப் பதற்றமாக மாறியுள்ள சூழலில் அமெரிக்காவை எதிர்கொள்ள “வெனிசுலா ஆயுதப் போருக்கும் தயாராக உள்ளது” என அந்நாட்டின் ஜனாதிபதி மதுரோ அறி வித்துள்ளார். வெனிசுலா மீது தாக்குதல் நடத்தவும் ஆட்சியை கவிழ்க்கவும் அந்நாடு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை ஆதரிப்பதாக டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பயணிகள் படகில் தீ  193 பேர் பலி

காங்கோ ஜனநாயக குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கவிழ்ந்த தில் 193 பேர் பலியாகியுள்ள னர். மேலும் 146 பேர் காணா மல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 500 க்கும் மேற்பட் டோர் பயணித்த நிலையில் 209 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு படு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மோசமாக பராமரிக் கப்படும் படகுகள், காங்கோ ஆற்றில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் நிலையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

இந்தியா மீது அதிக வரி விதிக்க  ஜி 7 நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம் 

ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் இந்தியா, சீனா மீது அதிக வரிகளை விதிக்க வேண் டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும் ரஷ்யா மீதான பொருளா தாரத் தடைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே இதே போன்ற அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யாவில் நிலநடுக்கம்  சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று அந்நாட்டின் காம்சட்கா தீபகற்பத்தின் அருகே 39.5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களை  சித்ரவதை செய்த இஸ்ரேல்

பாலஸ்தீன மேற்குக் கரையில் துல்கா ரெம் என்ற நகரில் 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீ னர்களை இஸ்ரேல் ராணு வம் கைது செய்து சித்ர வதை செய்துள்ளது. இரண்டு நாட்களாக ராணுவம் அங்கு தேடு தல் என்ற பெயரில் இந்த  அட்டூழியத்தை செய்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாலஸ்தீ னர்களை நகரின் முக்கிய பகுதியில் திறந்த வெளியில் கைகளையும் கண்களையும் கட்டிப் போட்டு விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.