tamilnadu

img

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம், பத்திரப் பதிவு அலுவலகம் கோரி போராட்டம்

வெம்பக்கோட்டை, ஏப்.27- விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்  டது வெம்பக்கோட்டை. தனி தாலுகா வின் தலைநகராக திகழும் வெம்பக் கோட்டையில்  நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம், பேருந்து நிலையம், பெண்  களுக்கான கழிப்பறை, அரசு மருத்துவ மனை, தேசிய வங்கி ஆகியவை துவங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பெருமாள்ராஜ் தலைமையேற்றார். துவக்கி வைத்து  ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி நிறைவுரையாற்றினார். மேலும் இதில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் எஸ். பெரிய சர்க்கரை,  கண்ணன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.