வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
பாபநாசம், ஜூலை 29- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது. இதில், சாசன உறுப்பினர்களை கௌரவித்தல், புதிய உறுப்பினர்களை இணைத்தல், சேவை திட்டம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சாசனத் தலைவி தில்லை நாயகி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் மலர்க்கொடி ஆளுநரை அறிமுகம் செய்தார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ஸ்டாலின் பங்கேற்று சாசன உறுப்பினர்களை கௌரவித்துப் பேசினார். மாவட்டச் செயல் அலுவலர் ஸ்டாலின் பீட்டர் பாபு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் பங்கேற்று சேவைத் திட்டமாக தஞ்சாவூரில் உள்ள லயன்ஸ் கிளப் டயாலிசிஸ் யூனிட்டுக்கு இலவசமாக டயாலிஸ் செய்வதற்கு ரூ.5,000, தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு ரூ.2,000 மதிப்பிலான 2 ஊன்றுகோல், காப்பகத்தை நிர்வகித்து வரும் அம்புஜத்திற்கு சேவைச் செம்மல் விருது, திருவலஞ்சுழி முதியோர் காப்பகத்திற்கு வாட்டர் பாட்டில்கள், துணி, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், அய்யம்பேட்டை கிரிக்கெட் டோர்னமெண்ட்டிற்கு கப் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் மண்டலத் தலைவர் சின்னதுரை, வட்டாரத் தலைவர் அபிராமி, லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் சம்மந்தம், ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்தினர். இதில் பாபநாசம் லயன்ஸ் சங்கம், அட்சயம் லயன்ஸ் சங்கம், கிங்ஸ் லயன்ஸ் சங்கம், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலாளர் பத்ம தர்ஷினி நன்றி கூறினார்.