லா பாஸ், டிச.06- ஒமைக்ரான் உருவானதற்கே தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்ததுதான் காரணம் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்ட மைப்பு (அல்பா) குற்றம்சாட்டி யுள்ளது. இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய அல்பாவின் செயலா ளர் லோரென்டி, “கோவிட்-19 தடுப்பூசிகளைப் பதுக்கி வைத்த தால், ஒமிக்ரான் உருவாவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது. பாதிப்பு க்கு ஆளாகும் வாய்ப்புள்ள மக்களு க்கு தடுப்பூசிகள் கிடைக்காததால் இறப்புகள் தொடர்கின்றன. தொற்றும் நீடிக்கிறது” என்றார். இது குறித்து மேலும் பேசிய அவர், சில வடக்கு நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கிய போதே, எச்சரிக்கை விடப்பட்டது. புதிய உருமாறிகள் உருவாகும் என்பதை அப்போதே வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். பாதிக்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப் பட்டிருப்பவர்களையும் புதிய ஒமிக்ரான் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக பயோன்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் உகுர் சாஹின் எச்சரித்துள் ளார். தடுப்பூசிகள் தடையின்றிக் கிடைத்திருந்தால் புதிய உருமாறியை உருவாகாமலேயே தடுத்திருக்க முடியும் என்று அல்பா மட்டுமல்ல, பல்வேறு வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
38 நாடுகளில் ஒமைக்ரான்
இதுவரையில் 38 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதாரக் கழகம், அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரித்துள்ளது. டெல்டா உருமாறியின் பாதிப்பு கள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் ஒமிக்ரான் வகை வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இதுவரை யில் 38 நாடுகளில் பரவியிருப்பதை உலக சுகாதாரக்கழகத்தின் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ள னர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதாரக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மரியா வான் கெர்கோவே, “மற்ற உருமாறி களுக்கும், ஒமைக்ரானுக்கும் இடை யிலான வேறுபாடுகளை இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்க வில்லை” என்றார்.