tamilnadu

கொள்கை அரசியலும், பொதுச்சேவை உணர்வும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலைவர் வி.எஸ்.!

கொள்கை அரசியலும், பொதுச்சேவை உணர்வும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலைவர் வி.எஸ்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

புதுதில்லி, ஜூலை 21 - கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரு மான வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு, பிரதமர்  நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் இரங்கல் பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘எக்ஸ்’ பக்கத் தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.  அச்சுதானந்தன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது.  மக்கள் சேவைக்காகவும் கேரளத்தின் வளர்ச்சிக் காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்த போது எங்களுக்கிடையே நடந்த உரை யாடலை நினைவு கூர்கிறேன். இந்த சோகமான  நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக் கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். முதல்வர் இரங்கல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில், “கேரள அரசியலில் புரட்சிகர மரபை ஆழமாக விட்டுச்சென்றுள்ளார் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். முன்னாள் முதல்வரான அவர், கொள்கை அரசியலையும், பொதுச்சேவை உணர் வையும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலை வர் மற்றும் வாழ்நாள் கம்யூனிஸ்ட். உண்மையான தலைவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் கேரள மக்களுக் கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாக வும் அமைச்சர் எஸ். ரகுபதி, அச்சுதானந்தனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்து வார்.  செவ்வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழக முன்னாள் முதல்வர் கலை ஞருடன், வி.எஸ். அச்சுதானந்தன் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சிபிஐ தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர்  இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கையில் கூறி யிருப்பதாவது: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னோடியும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்  காலமானார் என்ற துயரச் செய்தி, ஆழ்ந்த வேதனையளிக் கிறது. தோழர் வி.எஸ். அச்சுதானந் தன், சிறு வயதில் தேச விடுதலை  இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். அவரது 18-வது வயதில் இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து,  அமைப்பு பூர்வமாக செயல்படத் தொடங்கியவர். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு கட்சியை வழிநடத்துவதிலும், காலனி ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும்  கம்யூனிஸ்டுகள் மீது கட்ட விழ்த்து விடப்பட்ட, கொடிய  அடக்குமுறையை எதிர்கொண்ட வர். சிறை வாழ்க்கை சித்திர வதைகளை சந்தித்தவர். எந்த  நிலையில் கொள்கை நிலையில் தளர்வில்லாது உறுதியாக செயல்பட்டவர். வகுப்புவாத, மதவெறி, சாதிய  சக்திகள் அரசியல் தளத்தில் பேரபாயமாக வளர்ந்துள்ள நிலையில், பிளவுவாத சக்தி களை எதிர்த்த போராட்டம் கூர்மையடைந்து வரும் நேரத் தில், பொது வாழ்வில் அனுபவச் செறிவுள்ள தலைவரை கேரள  மாநில மக்கள் மட்டும் அல்ல,  நாட்டின் ஒட்டு மொத்த மதச் சார்பற்ற, சமூக நல்லிணக்கம் பேணும் ஜனநாயக சக்திகள் இழந்து விட்டனர். தோழர் வி.எஸ். அச்சுதானந் தன் மறைவுக்கு இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. அன்னாரை  பிரிந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும், மார்க்சிஸ்டு கட்சி தலைவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது”.  இவ்வாறு இரா. முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.