tamilnadu

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்காவின் அணுசக்தி கப்பல்  எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் 

அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி அமெரிக்கா நகர்த்தியதைத் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கொடுத்த பேட்டியில் அக்கப்பல்கள் ஏற்கனவே போர் நடவடிக்கையை துவங்கிவிட்டன என்பது தெளி வாகிறது. மேலும் இவ்விசயத்தில் டிரம்ப்புடன் மோதுவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கைதிகளுக்கு  தொழிற் பயிற்சி திட்டம்

இலங்கையில் முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி கொடுப்பதற்காக புதிய திட்டம் ஒன்று துவங்கப்படவுள்ளது. சிறைத் துறை செய்தித்தொடர்பாளர் ஜகத் வீரசிங்க செய்தி யாளர்களிடம் பேசும் போது, முதல்முறையாக இதுபோன்றதொரு திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தண்டனைக்குப் பிறகு சிறைக்கைதிகள் மறுவாழ்வு பெற வேண்டி இத்திட்டத்தை அவர்கள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் முற்றுகை:  பிரேசிலில் மக்கள் போராட்டம்

பிரேசிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். டிரம்ப் பிரேசில் மீது விதித்துள்ள வரி உயர்வு மற்றும் பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டின் மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் அமெரிக்காவை கண்டித்து “இறையாண்மை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல” என்ற கோசங்கள் அடங்கிய பதாகை ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஏர் இந்தியா விமானத்தில்  தொடர் இயந்திரக் கோளாறுகள் 

சிங்கப்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவ்விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 168 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள னர். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏர்  இந்தியா விமானங்கள் தொடர்ந்து இயந்திரக் கோளாறுகளை சந்தித்து வருகின்றன. தற்போது இந்த விமானத்தின் பழுது நீக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சில பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ரஷ்யாவிற்கு செல்லும்  அமெரிக்க தூதர் 

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர தனது சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வரும் வாரம் ரஷ்யா செல்வார் என டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க அந்நாடு என்ன செய்ய முடியும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர் உக்ரைனுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என கூறினார்.