tamilnadu

அமெரிக்க அரசின் வானளாவிய ராணுவ பட்ஜெட்

அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக,  ராணுவ ரீதியாக, சித்தாந்த ரீதியாக  தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மனிதகுலத்தை வெட்கி தலைகுனிய வைக்கிறது. உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை அமெரிக்க அரசு நிர்வகித்து வருகிறது. சீன அச்சுறுத்தல், ரஷ்யா அச்சுறுத்தல் போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறது. சென்ற ஆண்டு டிரம்ப் காலத்தில் அமெரிக்க அரசு மேற்கொண்ட ராணுவ பட்ஜெட்டைக் காட்டிலும் தற்போது ஜோ பைடன் 3800 கோடி டாலர் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளார். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ராணுவ வல்லமை பெற்ற 11 நாடுகளின் மொத்த ராணுவ பட்ஜெட் செலவினங் களை காட்டிலும் அமெரிக்க அரசின் ராணுவ செல வினம் கூடுதலானது.

2022-க்கான ராணுவ பட்ஜெட் 77800 கோடி டாலர் (43 லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க செனட்டில் எண்பத்தி எட்டு வாக்கு ஆதரவாகவும், 11 வாக்கு எதிர்த்தும் விழுந்தது. கோட் பிங்க் என்ற யுத்த எதிர்ப்பு பெண்கள் குழு எதிர்த்து வாக்களித்தவர்களை பாராட்டியுள்ளது. ராணுவ பட்ஜெட்டினால் அமெரிக்க ஆயுதக் கார்ப்ப ரேட்டுகளுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும். ஆனால் சாமானிய மக்களின் அத்தியாவசிய தேவை களுக்கான செலவினம் வெட்டப்படும். 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது ராணுவ ஆக்கிரமிப்பை அமெரிக்கா விலக்கிக் கொண்ட போதிலும், இராக் மற்றும் சில நாடுகளில் தனது படைகளை குறைத்துக் கொண்ட போதிலும், ராணுவ பட்ஜெட் வீங்க வேண்டிய அவசிய மென்ன?

தலிபான்களையே சமாளிக்க முடியாமல்  திணறிய அமெரிக்கா மிகப்பெரும் ராணுவ பலமிக்க சோசலிச சீனாவுடன் மோத முடியும் என நினைப்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலமே அமெரிக்க அரசு எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியும். பெர்னி சாண்டர்ஸ் போன்ற முற்போக்கு செனட்டர்கள் ராணுவ பட்ஜெட் செலவினத்தை குறைத்து வேலையில்லா கால நிவாரணம், கல்விக்கடன், சுகாதாரம், மருத்துவ சிகிச்சை போன்றவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யு மாறு வலியுறுத்தி உள்ளனர். சிறந்த நிர்மாணத்தை உருவாக்குவதற்கான (Build Back Better) மசோதாவிற்கு 2022ல் 17 ஆயிரத்து 500  கோடி டாலர் மட்டுமே சமூக, பருவநிலை பிரச்சினை களுக்கு அமெரிக்கா ஒதுக்கியது. ராணுவ பட்ஜெட்டில் இது 25 சதவிகிதம்கூட இல்லை.

- ஆர்.சிங்காரவேலு