tamilnadu

அஜய்மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தல்

புதுதில்லி, டிச.16- லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப் பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்  தொடர்ந்து வலி யுறுத்தியதால் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரி கையாளர் உள்பட ஐந்து பேர் கொல்லப் பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமி டப்பட்ட சதி; அது கவனக்குறைவால், அசட்டையால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டபவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.

வியாழன் காலை இரு அவைகளும் தொடங்கியதும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண் சிங்கிற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப் பட்டது. அதன்பின் வங்கதேசம் உருவான நாளையொட்டி அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இரு அவைகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங் கியபோது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுந்து, “லக்கிம்பூர் கலவரத்தில் சிறப்பு விசா ரணைக் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். விவசாயிகள் கொலையில் மத்திய அமைச்சர் மிஸ்ரா வுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகி றது. சதி நடந்திருக்கிறது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதனால் ஆளும் கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை

மாநிலங்களவை தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லக்கிம்பூர்-கெரி சம்பவம் தொடர்பாக விவா திக்கக் கோரினர் ஆனால், அதற்கு அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்துவிட்டார். அதனால் அவையில் சலசலப்பு நிலவியது. இரு அவைகளிலும் இதே கோரிக் கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி யதால் அவை பிற்பகல் இரண்டு மணிவரை  ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை கூடியபோதும் தொடர்ந்து இதே கோரிக்கை யை இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி. க்கள் முன் வைத்தனர். இதனால், இரு அவை களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 

;