தாராசுரம் கலைஞர் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு
கும்பகோணம், ஜூலை 4 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் கலைஞர் காலனியில் ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை க.அன்பழகன், குத்து விளக்கு ஏற்றி வைத்து அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மேயர் சர வணன், துணை மேயர் சுப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜன், மண்டல குழு தலைவர்கள் அசோக்குமார், மனோகரன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் குட்டி தட்சிணா மூர்த்தி, மாநகரப் பொருளாளர் ரவிச்சந்தி ரன், பணிகள் குழு தலைவர் சோடா கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பி னர்கள் சாகுல் ஹமீது, செல்வம், செயற்பொ றியாளர் லோகநாதன், நகர்நல அலுவலர் மருத்துவர் திவ்யா, மருத்துவர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.