tamilnadu

img

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமனமா?

சென்னை, செப். 14- அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நிய மிக்கக் கூடாது என போக்கு வரத்து கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக் கைகளை கைவிட வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு புதனன்று (செப். 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சிஐடியு தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். அரசு விரைவு போக்குவரத்துக் கழக தொமுச பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், சுப்பிரமணிய பிள்ளை (எச்.எம்.எஸ்), சுப்பையா சூரியகுமார் (ஏஐடி யுசி), சுப்புராமன் (எம்.எல்.எப்), ராஜூ (திராவிடர் கழக தொழிற்சங்கம்), மாநகர போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந் தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் காலியாக  உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என்று  நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால், நிர்வாகமோ ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிரந் தரத் தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஒப்பந்த  தொழிலாளர் சட்டம் தெளிவு படுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டு நர்களை நியமிப்பது ஒட்டு மொத்தமாக போக்குவரத்து கழகங்களை பாதிக்கும்,  பயணி களின் பாதுகாப்பிற்கும் எந்த உத்தரவாதமும் இருக்காது. படிப்படியாக போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்ப டைக்கும் நடவடிக்கை என்றும் தொழிற் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப் படையில் நியமனம் செய்வதை கைவிடவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

;