tamilnadu

சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம்

சென்னை,டிச.12- போலி அறிக்கை தாக்கல் செய்ததாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக்கண்ணன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யம் கடந்த 2018 ஆம் ஆண்டில் கை விரல்ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தியது.  இந்த எழுத்துத்தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் கோரி அருணாச்சலம் என்ற இரண்டாம் நிலை காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த கேள்விக்கான சரியான விடையை தேர்வு செய்து ஐஐடி பேராசிரியர் என்ற முறையில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கை யின்படி அருணாச்சலத்தின் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஆனால், மூர்த்தி என்ற பெயரில் சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் யாருமே இல்லை மனுதாரர் அருணாசலம் தரப்பில் புகார் கூறப்பட்டது. அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் மூர்த்தி என்ற பெயரில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக்கண்ணன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் பி.குமரேசனும், செந்தாமரைக்கண்ணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும், மதிப்பெண் கோரிய மனுதாரர் அருணாச்சலத்துக்காக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் ஆஜராகி வாதி ட்டனர்.  

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முழுக்க, முழுக்க சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தான் தவறு செய்துள்ளது. இந்த வழக்கில், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு ஆலொசகராக செயல்பட்ட விஜயகுமார் என்ற முதியவரையும் பள்ளி ஆசிரி யரான மூர்த்தியையும் போலீஸார் மிரட்டி அச்சு றுத்தி உள்ளனர். காவலரின் தொந்தரவால், முதியவரான விஜயகுமார் 22 நாட்களாக சிறை வாசம் அனுபவித்துள்ளார். எனவே மூர்த்தி, விஜயகுமார் ஆகியோர் மீதான குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.  போலி ஆவணங்களை தயாரித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்த தவறுக்காக விஜயகுமாருக்கு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக 3 மாத காலத்துக்குள் வழங்கவேண்டும் அதேபோல இந்த வழக்கில் குற்றம் புரிந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யம், அபராதமாக ரூ. 2 ஆயிரத்தை 4 வார காலத்து க்குள் உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரியான செந்தாமரைக் கண்ணன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

;