tamilnadu

img

சனாதனமும் சமூக சீர்திருத்தமும் இரு துருவங்கள்

கடலூர், ஜுலை 9-  சனாதனமும்  சமூக சீர்திருத்த மும் இருவேறு வேறு துருவங்கள். இதை புரியாமல் ஆளுநர் பேசுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கடுமையாக சாடினார்.  கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பாக்கத்தில் சனிக்கிழமை (ஜூலை 8)  நடைபெற்ற  வள்ளலார்  200 வது ஆண்டு விழா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிதியளிப்பு  அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர்  பேசிய தாவது: மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அனைவரும் சனா தனத்தை ஆதரித்து பேசுகின்றவர்கள் என்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆர்எஸ்எஸ், பாஜக, சங் பரிவாரங் கள் ஈடுபடுகின்றனர். அதன் ஒரு பகுதி யாக ஆளுநர் ஆர்.என்.ரவி பொய்யான பிம்பத்தை கட்ட மைத்துக் கொண்டுள்ளார். பசி, பட்டினி சமூகத்தின் அவலங்கள் என்பதை என்று கூறியவர் வள்ள லார். ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசின் கொள்கையால் மக்கள் பசி, பட்டினி யால் வாடி வருகின்றனர்.  உலக அளவில் வெளியிடப்பட்ட அதிக பசி நிலவும்  121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது.  உண்மை நிலையோ இப்படி இருக்கும்போது வள்ளலாரோடு சனாதனத்தை இணைத்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதியற்ற சமூகம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர்  வள்ளலார். பிறப்பின் காரணமாக மக்களை பாகுபாடுபடுத்தக் கூடாது என்று உரத்த குரலில் பேசினார். சாதி வெறியை தூண்டி விடுகிற, மதவெறி சித்தாந்தத்தை பின்பற்றுகிற சனா தனத்தையும் எதிர்த்தவர் வள்ளலார். 

கருணை இல்லா அரசு கடுகி ஒழிக என்று பாடியவர் வள்ளலார். அவர் சொன்னது போல் கருணை இல்லாத கார்ப்பரேட் அரசாக பாஜக அரசு உள்ளது. பெண்கள் மீது வன் கொடுமை அதிகரித்துள்ளது. வர தட்சணை கொடுமையால் 2017 இருந்து 2022 வரை 5 ஆண்டு காலத் தில் இந்தியாவில் வரதட்சணைக் காக 35,500 பெண்கள் கொல்லப்பட் டார்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது.  ரேசன் கடையில் ஒரே வரிசை யில் நிற்க முடியவில்லை. பல டீக்கடை களில் இரட்டை கிளாஸ் முறை உள்ளது. முடிதிருத்தும் நிலை யங்களில் மறுக்கப்படும் நிலை உள்ளது. இன்னும் எத்தனை காலத் திற்கு சாதி பெருமை பேசிக் கொண்டி ருப்பது. இதில் மாற்றம் வேண்டும் என்றுசொன்னால் அரசாங்கத்தின் கொள்கை மாற வேண்டும், அதோடு சேர்த்து நம்முடைய மன நிலையும் மாற வேண்டும். அனைத்து பகுதி மக்களுக்குசமமான உரிமை வேண்டும்,  சாதிய பாகுபாடு ஒழிய வேண்டும்.  கடந்த காலத்தில் சமூக சீர்திருத் தம்பேசிய வள்ளலார், ஐயா வைகுண்டசாமி அவர்களின் வரலாறு மக்கள் மத்தியில் கருத்துக்களை பரப்புகிறது. அவர்களுடைய கருத்து க்களை சுவீகரித்துக் கொள்ளக்கூடிய முயற்சியை சிபிஎம் எடுக்கிறது. மாற்றம் வேண்டும் என்று விரும்பு கிறவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் கருத்துக்கள் பக்கம் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இந்த கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் எம்.ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறு முகம், வி சுப்பராயன், எஸ். திரு அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. ஏழுமலை, டி.கிருஷ்ணன், கிளை  செயலாளர் அருள்மொழி நன்றி கூறினார்.   முன்னதாக. புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.

;