tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக

போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக

சென்னையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 13 - 27 ஆவது நாளாக போராட்டம் நடத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதி யர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வுகான வலியுறுத்தி சனிக்கிழமையன்று (செப்.13) சிஐடியு மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியான 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் கேட்டால் ஒரு கமிட்டி போடுகிறார். பண பலன், ஓய்வூதியம், பஞ்சப்படி, வாரிசு வேலை, 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்க ளுக்கு பழைய பென்சன், தனியார்  மயம் கூடாது, காண்ட்ராக்ட் விடக்கூடாது. போக்குவரத்தை தனியார் மயமாக்கப்   பட்டால் இலவச மகளிர் பயணம், மாணவர் இலவச பயணம் ரத்தாகும், நஷ்டத்தில் இயங்கும் பேருந்துகள் நிறுத்தப்படும், கிராமத்திற்கு பேருந்து இருக்காது. 24 மாதம் வழங்க வேண்டிய பணத்தை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும், ஓய்வு பெறுவோருக்கு அன்றே பணத்தை வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், பொருளாளர் பி.சுந்தரம், வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.அருள்குமார், சங்கத்தின் துணை செய லாளர்கள் எம்.உதயகுமார், பேபி சகிலா, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.