டிஏ உயர்வை முழுமையாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜுன் 30- கும்பகோணத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வாயில் முன்பு, ஓய்வுபெற்ற பணியாளரை வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பக்கூடாது. ஒப்பந்த உயர்வினை பென்சனில் கொடுக்க வேண்டும். டி.ஏ உயர்வினை முழுமையாக நிலுவைத் தொகையுடன் வழங்கிடவும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக அமல்படுத்திடவும் வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர் ரவி, துணைப் பொதுச் செயலாளர்கள் அமலதாஸ், மனோகரன், நிர்வாகிகள் கண்ணன், கந்தசாமி, ராமகிருஷ்ணன், ஞானசேகரன், மண்டல பொருளாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் முக்கியமான சாலையில், குடமுருட்டி ஆற்றின் மீதான பாலம் பழுதடைந்ததால், அதன் அருகிலேயே புதிய பாலம் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டது. புது பாலம் கட்டி ஒரு வருடமாகியும் இணைப்பு சாலை போடாததால், புதிய பாலம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பழைய பாலத்தின் அகலம் குறைவு என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.