tamilnadu

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர், ஜன.16- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிர சித்தி பெற்றது. அலங்கா நல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.  தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பால மேட்டிலும் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.  ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். கொரோ னா பரவலால் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவித்ததால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு ஒரு தள்ளி இன்று (ஜன.17) நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராள மான பரிசுகள் கிடைக்கும் என்பதால் மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளையை அடக்குவார்கள். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டும். கொரோனா பரவல் காரணமாக 300 வீரர்கள் மட்டுமே இந்தாண்டு பங்கேற்கின்றனர், தவிர 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதிகபட்சமாக 700 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிட முடியும்.