tamilnadu

img

‘அறிவியலாய் சிந்திப்போம்; பின்னலாய் இணைவோம்’

திருப்பூரில் ‘அறிவியலாய் சிந்திப்போம்; பின்னலாய் இணைவோம்’ என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் தீக்கதிர் நாளிதழ் நடத்தும் மாரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது. இந்த மாரத்தான் ஓட்டத்தை முறைப்படி தொடக்கி வைக்கும் வகையில் சனியன்று திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாரத்தானில் பங்கேற்க பதிவு செய்த 10 பேருக்கு டி - சர்ட் வழங்கி வாழ்த்தி பேசினார். தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், தீக்கதிர் எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.