tamilnadu

img

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சிபிஎம்-மில் இணைந்தனர்

திருத்துறைப்பூண்டி, டிச. 22- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியம் பாமணி மற்றும் கட்டிமேடு ஊராட்சிகளில் பல்வேறு அர சியல் கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா புதனன்று காலை 11. 30 மணியளவில்  நடைபெற்றது.  பாமணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ். முத்துச்செல்வன் தலைமை வகித்தார். சதாம் உசேன், அமானுல்லா, வார்டு உறுப்பினர் பிரமிளா  ரவி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.  

இதேபோல் கட்டிமேடு ஊராட்சியில் தியாகு தலைமையில் ராஜபாரதி வெற்றி வேல் முன்னிலையில் 25க்கும் மேற்பட்டோர் தன்னை இணைத்துக் கொண்டனர். இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி புதி தாக இணைந்த தோழர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே. ஜி.  ரகுராமன், ஒன்றியச் செயலாளர் டி. வி.  காரல்மார்க்ஸ், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தி னம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே .வேலவன், விரவி என். வீராசாமி, வி. வி.  செந்தில்குமார், கோபி, மதியழகன், வீரசேக ரன், விதொச ஒன்றிய குழு உறுப்பினர் தங்க மணி, மாதர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இணைந்த தோழர்களை வாழ்த்தினர்.

;