சென்னை, டிச. 30 - புத்தாண்டு இரவு வழிபாட்டிற்கு தடை யில்லை என்று இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரி வித்துள்ளார். புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், காஞ்சி புரத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு காலம் காலமாக எந்தெந்த கோவில்களில் வழிபாடுகள் நடை பெறுமோ அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்த தடையில்லை. பக்தர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். அதேநேரம், பெருந்தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடை பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவ சம் அணிந்து செல்ல வேண்டும். இடை வெளியை கடைபிடித்து வழிபாடு செய்ய செல்ல வேண்டும். சாமி தரிசனம் செய்ய லாம். அர்ச்சனைகளை தவிர்க்க வேண் டும்.