tamilnadu

img

பெரம்பலூரில் தீக்கதிர் சந்தா வழங்கல்

பெரம்பலூரில் தீக்கதிர் சந்தா வழங்கல்

பெரம்பலூர், ஆக.16 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தீக்கதிர் சந்தா வழங்கும் விழா மற்றும் கியூபா ஆதரவு நிதி வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கட்சி அலுவல கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு தீக்கதிர் மாவட்டப் பொ றுப்பாளர் ஏ.ரெங்கநாதன் தலைமை வகித்தார். கட்சியின் பெரம்பலூர் ஒன்றி யச் செயலாளர் பெரியசாமி, குன்னம் வட்டச் செயலாளர் செல்லமுத்து, வேப் பந்தட்டை வட்டச் செயலாளர் கே.எம். சக்திவேல், மின்னரங்க கமிட்டி செயலா ளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லத்துரை, ஏ. கலையரசி, ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நட ராஜனிடம், தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.ரெங்கநாதன் 149 ஆண்டு சந்தா மற்றும் 60 அரையாண்டு சந்தாவிற் கான தொகை ரூ. 4,14,700-ஐ வழங்கி னார். தொடர்ந்து கியூபா ஆதரவு நிதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை, 21,485 ரூபாயை மாநி லக் குழு உறுப்பினர் சாமி.நடராஜனிடம் வழங்கினார். பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். கருணாநிதி, ஆர். கோகுலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.