tamilnadu

புதிய நெருக்கடிகளை அமெரிக்கா உருவாக்குகிறது

டெஹ்ரான், டிச.8- சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளில் இயங்கி வந்த பல அமெரிக்க ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தால் புதிய நெருக்கடிகளை அமெரிக்கா உருவாக்குவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய ஸ்டேட் என்றும், டேஷ் என்றும் அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பு மேற்கு ஆசிய நாடுகளில் இயங்கி வருகிறது. சிரியா மற்றும் இராக் நாடுகளில் அந்த அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வந்த தாக அந்நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஆனால், புதிய புதிய பெயர்க ளில் அமைப்புகள் வளர்க்கப்படுவதை சுட்டிக்காட்டும் அந்த நாடுகள், புதிய நெருக்கடியை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்கிறார்கள். சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் மேக்தாத் தற்போது ஈரான் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஆதரவு பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அலி ஷாம்கானியுடன் அவர் ஆலோ சனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பால் எரிச்சல் அடைந்துள்ள அமெரிக்காவின் கூட்டாளி இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்தியி ருக்கிறது. வழக்கம்போல, ஈரானின் ஆயுதங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பொய் சொல்லியிருக்கிறது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அலி ஷாம்கானி, “டேஷ் மற்றும் தக்பிரி பயங்கரவாதிகள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்தத் தோல்விக ளால் அமெரிக்கா பெரும் கோபத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அமைதி திரும்பிவிடக்கூடாது

என்பதற்காக அமெரிக்கா புதிய நெருக்க டிகளை உருவாக்க முயல்கிறது. சிரியாவில் ஒரு பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்குவதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாகும். இது ஒட்டுமொத்த பகுதிக்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார். இராக், சிரியா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து சண்டையிட்டு வருகையில் இந்நாடுகளில் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கு தல்கள் நடத்தி வருகின்றன. 2019 ஆம் ஆண்டில் 12 அப்பாவி மக்களைக் கொன்ற விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க ராணுவத்தை அம்பலப்படுத்தியுள்ளதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

;