tamilnadu

img

அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

சென்னை, டிச. 18- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னை  மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள கே.ஆர்.சங்கரன் நினைவரங்கில் (ராம லட்சுமி பாரடைஸ்)  மேள வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் டிசம்பர்  18 சனிக்கிழமையன்று எழுச்சியுடன் துவங்கியது. பேரணியை முன்னாள் மாநில துணைத் தலைவர் பி.வி.சந்திரசேகரன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை மாநிலத் தலைவர் மு.அன்பரசு, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனக் கொடியை ஆ.செல்வம் ஆகியோர் ஏற்றினர். தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் துவங்கிய பொது மாநாட்டி ற்கு மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற் றார். மாநாட்டை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். பின்னர் தொடங்கிய பிரதிநிதித்து வப் பேரவைக்கு மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமை வகித்தார். நிதிக் காப்பாளர் ம.அந்தோணிசாமி வர வேற்றார். வேலை, அமைப்பு ஸ்தாபன அறிக்கையை பொதுச்செயலாளர் ஆ. செல்வமும், வரவு-செலவு அறிக்கையை மு.பாஸ்கரனும் சமர்ப்பித்தனர். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பி னர் கோ.பழனியம்மாள் தலைமையில் மகளிர் அமர்வு நடைபெற்றது.

மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் உ.சுமதி வரவேற்றார். மாநில மகளிர்  துணைக்குழு அமைப்பாளர் சி.பர மேஸ்வரி அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பி னர் ப.சுந்தரம்மாள் நன்றி கூறினார். சங்கத்தின் மாநில பொருளாளர் முனைவர் தீபா “பேசுவது பெண் உரிமை, பேணுவதோ பெண் அடிமை” என்ற தலைப்பிலும்,  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்  மண்டல துணைத் தலைவர்  க.சுவாமி நாதன்   “மறுக்கப்படும் உரிமைகள், பறிக்கப்படும் சலுகைகள், எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினர். இன்று முதலமைச்சர் பங்கேற்பு ஞாயிறன்று (டிசம்பர் 19) நடை பெறும் பொது மாநாட்டில் சிறப்பு  விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் ஆகியோரும் உரையாற்றுகின்ற னர். மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. செல்வம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிப் பேசுகிறார். அகில இந்திய அளவில் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும்  இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பங்கேற்பது என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

;